பதிவு:2024-07-10 12:03:43
மதுவிலக்கு அமல் பிரிவில் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 165 இருசக்கர வாகனங்கள் 17 நான்கு சக்கர வாகனங்கள் என 182 வாகனங்கள் ஏலம் :
திருவள்ளூர் ஜூலை 10 : திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிளக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 165 இருசக்கர வாகனங்கள் 17 கார்கள் என 182 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது இந்நிலையில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.
இந்த ஏலத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம் எடுக்கும் நபர்கள் ஆயிரம் ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முன் தொகை செலுத்தி டோக்கன் போட்டுக் கொண்டு ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஏலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு டோக்கன்களை பெற்று ஏலத்தில் கலந்து கொண்டனர்.இந்த ஏலம் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி அனுமந்தன் தலைமையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.