பதிவு:2024-07-10 12:06:40
திருவள்ளூர் அடுத்த புட்லூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகை ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை : செவ்வாபேட்டை போலீசார் விசாரணை :
திருவள்ளூர் ஜூலை 10 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி எம்ஜிஆர் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் ஏசையா சுதா தம்பதியினர். இதில் ஏசையா கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதனால் இன்று வழக்கம் போல் ஏசையா வேலைக்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து பகல் 10.30 மணி அளவில் சுதா டைலரிங் பயிற்சிக்கு சென்றுவிட்டார்.
டெய்லரிங் கிளாஸ் முடித்து சுதா 1 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து நகைகளை தேடிப் பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் 2 மணி அளவில் புகார் செய்தார் .
புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப் பகலில் நடைபெற்ற கொள்கை சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை. ஏற்படுத்தி உள்ளது