பதிவு:2024-07-10 12:08:51
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் 2 -ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 10 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு முதல்வரின் முகவரி துறையின் கீழ் மக்களுடன் முதல்வர் முகாம் முதற்கட்டமாக 3.1.2024 முதல் 23.1.2024 வரை நகர்ப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு மொத்தம் 5055 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு முதற்கட்ட முகாம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊரகப் பகுதியில் விரிவாக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி வைப்பதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் உள்ள ஞானஜோதி மஹாலில் 2-ம் கட்டமாக நடைபெறும் மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் கைத்தறி மற்றும் தூணிநூல்த் துறை அமைச்சர் ஆர்,காந்தி கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சிப் பகுதிகளில் 2011 மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு முகாமிற்கு 20 ஆயிரம் மக்கள் தொகை என கணக்கீடு செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
முதற்கட்டமாக பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 7 முகாம்களும் (15. 7. 2024 முதல் 24 .7. 2024 வரையிலும்), திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 7 முகாம்களும் (15. 7. 2024 முதல் 24 .7. 2024 வரையிலும்), சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 7 முகாம்களும் (15. 7. 2024 முதல் 24 .7. 2024 வரையிலும்), எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 53 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 6 முகாம்களும் (15. 7. 2024 முதல் 23.7. 2024 வரையிலும்), வில்லவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 7 முகாம்களும் (15. 7. 2024 முதல் 22 .7. 2024 வரையிலும்), ஆக மொத்தம் 171 கிராம ஊராட்சிகளில் 32 முகாம்கள் நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டமாக மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 8 முகாம்களும் (25. 7. 2024 முதல் 05.08 2024 வரையிலும்), கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 8 முகாம்களும் (25. 7. 2024 முதல் 05.08 2024 வரையிலும்), பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 49 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 5 முகாம்களும் (25. 7. 2024 முதல் 31.07 2024 வரையிலும்), திருவலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 5 முகாம்களும் (25. 7. 2024 முதல் 31.07 2024 வரையிலும்), புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளில் 1 முகாமில் (25. 7. 2024 ) ஆக மொத்தம் 214 ஊராட்சிகளில் 27 முகாம்கள் நடைபெற உள்ளது.
மூன்றாம் கட்டமாக ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 5 முகாம்களும் (06.08 2024 முதல் 11.08. 2024 வரையிலும்), கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 6 முகாம்களும் (6.8 2024 முதல் 12.08. 2024 வரையிலும்), பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தவிர 4 முகாம்களும் (6.8 2024 முதல் 9.8. 2024 வரையிலும்), திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிறு கிழமை தவிர 4 முகாம்களும் (6.8 2024 முதல் 9.8.2024 வரையிலும்), ஆக மொத்தம் 141 ஊராட்சிகளில் 19 முகாம்கள் நடைபெற உள்ளது. ஆக மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் நடைபெறுவதற்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நடைபெற்ற நகர்ப்புற முகாம்களில் 12 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தற்போது கூடுதலாக மருத்துவ மற்றும் குடும்ப நலம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை ஆகிய மூன்று துறைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்களில் கீழ் காணும் துறைகளுக்கு எதிராக குறிப்பிட்டப்பட்டுள்ள அலுவலர்கள் முகாம் நடைபெறும் நாளில் முகாமில் கலந்து கொள்வதே கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும். முகாமில் பெறப்படும் மனுக்கள் 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். திருவள்ளூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் முகாமில் ஒருங்கிணைத்து பணியாற்றி முகாம்களை சுமுகமாக நடத்தின அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திடவும் அனைத்து வட்டாட்சியர்களும் பணி மேற்கொள்ள வேண்டும்.இத்திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.