திருவள்ளூரில் 4 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் : பிற்படுத்தப்பட்டோர் பொருளதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் கே.காஜாமுகைதீன் வழங்கினார்

பதிவு:2022-05-23 11:28:40

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் எளிதில் கடன் பெறும் வகையிலும்,கடன் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்தும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் கே.காஜாமுகைதீன் கூட்டுறவுத்துறை மற்றும் வங்கி அதிகாரிகளோடு பிற்படுத்தப்பட்டோர் பொருளதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இரா.நந்தகோபால் முன்னிலையில் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5480 வீதம் ரூ.21,920 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் கே.காஜாமுகைதீன்,பிற்படுத்தப்பட்டோர் பொருளதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இரா.நந்தகோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆ.சிவகாமி,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மேலாளர் சத்திய நாராயணன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.