பதிவு:2024-07-11 12:08:39
கீழச்சேரியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் இடத்தினை கைத்தறி மற்றும் துணிநுல்துறை அமைச்சர் ஆர். காந்தி ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 11 : தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி புனித அண்ணாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் தொடங்கப்படும் இடத்தினை கைத்தறி மற்றும் துணிநுல்துறை அமைச்சர் ஆர். காந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி. ராஜேந்திரன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 15 ம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்க உள்ளார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்று வரும் பணியினை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் பணிகளும் சிறப்பான முறையில் இருக்க வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.ஒ.என். சுகபுத்ரா,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆய்ஷ்குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.