பதிவு:2024-07-11 12:12:56
திருவள்ளூரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மாவட்ட விழிக்கண் கண்காணிப்பு இரண்டாம் காலாண்டு குழு கூட்டம் :
திருவள்ளூர் ஜூலை 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மாவட்ட விழிக்கண் கண்காணிப்பு இரண்டாம் காலாண்டு குழு கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு அளித்தல் தொடர்பான மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள்,ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால்,மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் தீருதவி தொகை உரிய காலக்கெடுவிற்குள் வழங்க ஆவண செய்தல் குறித்தும்,பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட விதி 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-ன் பிரிவு 7(2) ன்படி புலன் விசாரணை அலுவலர் 60 தினங்களுக்குள் புலன் விசாரணையினை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விதி 12(4)-ன் படி முதல் தகவல் அறிக்கை பதிந்த ஏழு தினங்களுக்குள் முதற்கட்ட நிவாரண தொகையினை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே இவ்வழக்கு தொடர்புடைய ஆவணங்களில் முக்கிய பங்கு வகிக்கும் வாதி மற்றும் எதிரிகளின் ஜாதிச்சான்று மெய்த்தன்மை அறிக்கை, போக்ஸோ மற்றும் கற்பழிப்பு புகார்கள் சார்ந்த மருத்துவ சான்று ஆவணங்கள் மற்றும் கொலை,இறப்பு சார்ந்த வழக்கில் கொலையுண்டவரின் வாரிசுதாரர்கள் சான்று ஆகியவற்ற்pனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் காலதாமதமின்றி வழங்கிட அனைத்து நடவடிக்கையினை மேற்கொள்ளுதல் குறித்தும், பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதி 1995 மற்றும் திருத்த விதிகளின் கீழ் கொலை,கற்பழிப்பு,கூட்டு பாலியல் வன்கொடுமை, படுகொலை,நிரந்தர ஊனம் மற்றும் கூட்டு கொள்ளை சார்புடைய வழக்குகளுக்கு வன்கொடுமை நிவாரணத் தொகையுடன் கூடுதலாக ஓய்வூதியம் ,வேலைவாய்ப்பு ,விவசாய நிலம், வீட்டுமனை மற்றும் இதர நிவாரணங்கள் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கையினை மேற்கொள்ளுதல். குறித்தும், பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் 17-ன் படி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளின் நிலையினை ஆய்வு செய்திட மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தினை காலாண்டிற்கு ஒருமுறை தவறாமல் நடத்திடவும் விதி 17-யின் படி உட்கோட்ட அளவில் விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுவினை மேலும் காலதாமதமின்றி ஏற்படுத்தி காலாண்டிற்கு ஒருமுறை குழு கூட்டத்தினை நடத்திட அனைத்து நடவடிக்கையினை மேற்கொள்ள கோட்ட வருவாய் அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது
தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் தொடர்பான மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, நிர்வாகங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் அவர்களது முன்னேற்றம் குறித்தும், தனியார் நிறுவனம் மற்றும் தனி நபர்கள் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுத்தல் குறித்தும், தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் தாட்கோ திட்டத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10 மாணவர்களுக்கு தலா ரூ.1000,வீதம் ரூ.10000,12 வகுப்பு தேர்ச்சி பெற்று 10 மாணவர்களுக்கு தலா ரூ.1500 வீதம் ரூ.15000, பட்டப்படிப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு தலா ரூ.1500 வீதம் ரூ.3000 ஆக மொத்தம் ரூ.28000 க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா,வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, தட்கோ மேலாளர் இந்திரா, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் ஹரிஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.