பதிவு:2024-07-11 12:18:37
பட்டரைபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ டில்லி போலாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது :
திருவள்ளூர் ஜூலை 11 : திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ளது பழம்பெரும் அருள்மிகு ஸ்ரீ டில்லி போலாட்சி அம்மன் திருக்கோவில்.இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த திருக்கோவிலில் மகா கணபதி பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் காலயாக பூஜை, நான்காம் கால யாக பூஜை முடிந்து, பல்வேறு திருத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கலசங்களில் ஊற்றி அருள்மிகு ஸ்ரீ தில்லி போலாட்சி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பட்டறை பெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அம்மன் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றதுடன் புனித நீரை தங்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.