பதிவு:2022-05-23 11:31:04
திருவள்ளூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மே 22 : உத்தரபிரதேச மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் கியான் வாபி மசூதியில் லிங்கம் இருப்பதாகவும் அது கோயிலாக இருந்ததாகவும் கூறி ஆர் எஸ் எஸ் சங்பரிவார் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வாங்கியுள்ளனர் எனக்கூறி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் அரசியலமைப்பு சட்டங்கள் முடக்கப்பட்டு சிறுபான்மையினர் மீது கடும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன என்றும், சிறுபான்மையினரின் மத வழிபாட்டுக்கும் பல்வேறு இடையூறுகள் வருவதாகவும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பினர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது குறிவைத்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் பாபர்மசூதி போல் கியான் வாபி மசூதியும் இடிப்பதற்கு தயாராகி வருகின்றனர் இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கருமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது தற்போது இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் இளையோர்களை கண்டித்தும் வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும் இங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது மேலும் இதே நிலை நீடித்தால் இந்த போராட்டம் தீவிரமாகும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில நிர்வாகி நாகூர்மீரான் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாத் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமுமுக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கொள்ளிட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்