பதிவு:2024-07-12 11:11:09
கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் 2-ம் கட்டமாக நடைபெற்ற ‘’மக்களுடன் முதல்வர்” திட்டம் முகாமில் நலத்திட்ட உதவிகள் : கைத்தறி மற்றும் தூணிநூல் துறை அமைச்சர் ஆர்,காந்தி வழங்கினார் :
திருவள்ளூர் ஜூலை 12 : தமிழ்நாடு முதலமைச்சர் தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2-ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் ‘’மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தொடங்கி வைப்பதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் உள்ள ஞானஜோதி மஹாலில் 2-ம் கட்டமாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர்” திட்டம் முகாமில் கைத்தறி மற்றும் தூணிநூல்த் துறை அமைச்சர் ஆர்,காந்தி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்,திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச .சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே..வி.ஜி .உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் பேசியதாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் ‘’மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் 2 -ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 15.07.2024 முதல் 13.08.2024 வரை 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நடைபெற்ற நகர்ப்புற முகாம்களில் 12 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தற்போது கூடுதலாக மருத்துவ மற்றும் குடும்ப நலம்,வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை,பால் வளம் மற்றும் மீன்வளத்துறை ஆகிய மூன்று துறைகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சில துறைகளின் கீழ் 15 சேவைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது ஆக மொத்தம் 58 சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட உள்ளது. முகாமில் பெறப்படும் மனுக்கள் 30 நாட்களில் தீர்வு காணப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் 2-ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் துவக்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை பொது மக்கள் நல்ல முறையில் முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 17 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16,32,187 மதிப்பீட்டிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு சிறு விவசாய சான்று பட்டா மாறுதல் வருமானச் சான்று மருத்துவ காப்பீட்டு அட்டையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பிலான தையல் இயந்திரத்தினை கைத்தறி மற்றும் தூணிநூல்த் துறை அமைச்சர் ஆர்,காந்தி வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஓ. என் .சுகபுத்ரா.இ.ஆ.ப. உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா,உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரணி, தனித்துணை ஆட்சியர் கணேசன், திருத்தணி ஒன்றிய குழு தலைவர் தங்கம் தனம் , இணை இயக்குநர் (வேளாண்) முருகன், மாவட்ட சுகாதார அலுவலர் மீரா திருத்தணி வருவாய் கோட்டாசியர் தீபா மற்றும் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.