திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி : உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா துவக்கி வைத்தார் :

பதிவு:2024-07-12 11:15:58



திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி : உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா துவக்கி வைத்தார் :

திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி : உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜூலை 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியை உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா துவக்கி வைத்து பேசினார்.

உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை திங்கள் 11 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது."தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது”மக்கள் தொகை தின விழா மூன்று கட்டமாக கொண்டாடப்படுகிறது.முதற்கட்டமாக வட்டார அளவில் உயர் பிறப்பு தாய்மார்களையும் மற்றும் இளம்வயது கர்ப்பிணிகளையும் கண்டறிந்து குடும்ப நல சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தகுந்த குடும்ப நல சேவைகள் பெற்று பயன்பெற அறிவுறுத்தல், இதனை 2024 ஜூன் 1 முதல் 20 வரை தயார்படுத்தும் கட்டமாக கருதப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக, வட்டார அளவில் உயர் பிறப்பு தாய்மார்களையும், இளம் வயது கர்ப்பிணிகளையும் ஒன்று சேர்த்து குடும்ப நல சேவைகள் பயன்படுத்திக் கொள்ள மேற்காணும் அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்தல், இதனை 2024 ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை பணிகள் மேற்கொள்ளப்படுதல் இரண்டாம் கட்டமாக கருதப்படுகிறது.மூன்றாம் கட்டமாக, மேற்கண்ட தாய்மார்களுக்கும், இளம் வயது கர்ப்பிணி பெண்களுக்கும் நிரந்தரம் மற்றும் தற்காலிக குடும்ப நல சேவைகள் அளித்தல். இதனை 2024 ஜூலை 11 முதல் ஜூலை 24 வரை குடும்ப நல சேவைகள் அளித்தல் மூன்றாம் கட்டமாக கருதப்படுகிறது.

முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவ மாணவியர்களின் மௌன மொழி விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா வழங்கினார்.

இதில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் து. ரேவதி, இணை இயக்குநர் நலப் பணிகள் ள . மீரா, துணை இயக்குநர் (ஆய்வு), மு. இராணி, மாநில குடும்ப நல இயக்குனரகம், சென்னை, ரூ. சேகர், குடும்ப நல துணை இயக்குநர்,திருவள்ளூர், பிரியா ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர், திருவள்ளூர் பிரபாகர், மாவட்ட சுகாதார அலுவலர், இராஜேந்திரன், ஆவடி மாநகராட்சி சுகாதார மருத்துவர், சங்கீதா, துணை இயக்குநர் (காசநோய்), மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.