பதிவு:2024-07-12 11:32:21
பள்ளிப்பட்டில் உடல் உறுப்புதானம் செய்த பாபு என்பவரின் உடலுக்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை :
திருவள்ளூர் ஜூலை 12 : உடல் உறுப்புதானம் செய்த திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் நெ 03 புதுப்பட்டு வருவாய் கிராமம் புதுப்பட்டு காலனியை சார்ந்த பாபு என்பவர் கடந்த சனிக்கிழமை (6/07/24) அன்று வண்டலூர் அருகே நடந்த விபத்து காரணமாக மியட் மருத்துவமனையில் (10/07/24) அன்று மூளைச்சாவு அடைந்துள்ளார் அவரின் உடலுறுப்புகள் ஆகியவை தானம் செய்யப்பட்டது. (10/07/24) அன்று அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக திருத்தணி, வருவாய் கோட்டாட்சியர் தீபா நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி. அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் நெ 03 புதுப்பட்டு வருவாய் கிராமம் புதுப்பட்டு காலனியை சார்ந்த பாபு என்பவர் த/பெ அமாவாசை (47) என்பவர் அத்திப்பட்டு ( அம்பத்தூர்) உள்ள மதுபான கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்துள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள ஆவடியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேற்படி நபர் கடந்த சனிக்கிழமை (6/07/24) அன்று வண்டலூர் அருகே நடந்த விபத்து காரணமாக மியட் மருத்துவமனையில் (10/07/24) அன்று அதிகாலை மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் உடலுறுப்புகள் ஆகியவை தானம் செய்யப்பட்டது. அவருக்கு ஜாஸ்மின் (12) என்ற ஒரு மகள் மட்டும் இருப்பதாக கிராம விசாரணையில் தெரியவருகிறது. மேற்படி நபரின் உடலானது (10/07/24) அன்று மதியம் 3:00 மணியளவில் இறுதி சடங்கு ஏற்பட்டிற்காக புதுப்பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேற்படி நபருக்கு அரசு சார்பில் மதிப்புக்குரிய வருவாய் கோட்டாட்சியர் தீபா அரசு மரியாதையாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,தமிழ்நாடு முதலமைச்சர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களுடைய தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றுஅறிவித்துள்ளார்.இந்த நிகழ்வின்போது, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவகுமார், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.