திருவள்ளூரில் போதைப் பொருள் புழக்கத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு :

பதிவு:2024-07-12 11:27:15

திருவள்ளூர் ஜூலை 12 : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 63-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இதற்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் புழக்கத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா தலைமையில் திருவள்ளூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்பாவி மக்களை கள்ளச்சாராயம் குடிக்க வைத்து உயிர் இழக்க செய்ய வைத்த திமுக அரசை கண்டித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் கடம்பத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் சிற்றம் சீனிவாசன் திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் வி. ஆர்.ராம்குமார், எஸ்.ஏ நேசன், கே.பி.எம்.எழிலரசன், ஞானகுமார், துக்காராம், கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுமித்ரா வெங்கடேசன், மற்றும் நிர்வாகிகள் குமரேசன், ஜோதி, திலகவதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.