பதிவு:2024-07-15 13:58:08
கீழச்சேரி புனித அன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் தொடங்கப்படும் இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 13 : தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி புனித அன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் தொடங்கப்படும் இடத்தினை சமுக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ச.சந்திரன் (திருத்தணி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகிற 15 ம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்க உள்ளார். அதன் அடிப்படையில் சமுகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் விழா நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் வருகை தரும் நுழைவு வாயில், மேடை அமைய உள்ள இடம் , சமையல் அறை, குழந்தைகளுடன் அமர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உணவு உண்ணும் இடம், நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஒ.என். சுகபுத்ரா,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆய்ஷ்குப்தா, மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.