பதிவு:2024-07-15 14:01:19
திருமணிகுப்பத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மாதிரி அங்கன்வாடி மையமாக தரம் உயர்த்தி திறப்பு : பயிற்சி உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா சிறப்பு திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட திருமணிக்குப்பம் காலணி அங்கன்வாடி மையமானது மாதிரி அங்ன்வாடி மையமாக மாற்றப்பட்டுள்ளது. செயின் கோபைன் கார்ப்பரேட் நிறுவனமும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும் இணைந்து சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்த அங்கன்வாடி மையத்தை புனரமைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் சுகாதார திட்ட துணைத்தவைர் மருத்துவர், கிருஷ்ண குமார் தலைமை தாங்கினார். திருமணிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைர் மேகலா தேவ பிரகாசம் முன்னிலை வகித்தார்.
செயின்ட் கோபைன் நிறுவன மனதவளத்துறை மேலாளர்கள் ஜான் பிரேம், ஞான மாணிக்கம், ஜான்பால் வாழ்த்துறை வழங்கினர்.ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன திட்ட மேலாளர்கள் ஆனந்த், அனு, கீர்த்தனா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முன்னதாக உதவி பொது மேலாளர் லாசர் வரவேற்றார்.ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் துணைத்தலைவர் பிரின்ஸஸ் பியூலா திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாதிரி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை கவரும் வகையில் புனரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பள்ளது. மேலும், குழந்தைகளின் முன்பருவ கல்வியை மேம்படுத்த டிஜிட்டல் டிவி, கல்வி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, குழந்தை நேய கழிப்பறை வசதி. சுற்றுசுவர், காய்கறித்தோட்டம், சமையலறை வசதிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒருபகுதியாக குழந்தை வளர்ச்சி. ஊட்டச்சத்து, ஆரோக்கியம் சார்ந்து குழந்தைகளின் தாய்மார்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் தொழிற்சாலை மேலாளர் சேர்மானந்த், தலைமை கண்காணிப்பு பாதுகாப்பு அதிகாரி ஆரோக்கிய பிரகாசம், கடம்பத்தூர் ஒன்றிய குழந்தை வளர்ச்சி அலுவலர் ஜெனிபா. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். மேலும், விழாவின் முடிவில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.