திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-I தேர்வு : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2024-07-15 14:10:03

திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர்,சி.எஸ்.ஐ கௌடி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-I தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-I தேர்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 4313 நபர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். அதில். 2694 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 1619 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வு 13 மையங்களில் நடைபெற்று வருகிறது. தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தெரிவித்தார்.