திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் துறையில் முதல் முறையாக 4.5 கிலோ கட்டியை ஒருவருக்கு சினைப்பையில் இருந்தும், இன்னொரு நோயாளிக்கு 3.5 கிலோ கட்டியை கர்ப்பப்பையுடன் சேர்ந்து இருந்ததைமருத்துவர்கள் அகற்றி சாதனை :

பதிவு:2024-07-16 11:04:25



திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் துறையில் முதல் முறையாக 4.5 கிலோ கட்டியை ஒருவருக்கு சினைப்பையில் இருந்தும், இன்னொரு நோயாளிக்கு 3.5 கிலோ கட்டியை கர்ப்பப்பையுடன் சேர்ந்து இருந்ததைமருத்துவர்கள் அகற்றி சாதனை :

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் துறையில் முதல் முறையாக 4.5  கிலோ கட்டியை ஒருவருக்கு சினைப்பையில் இருந்தும், இன்னொரு நோயாளிக்கு 3.5 கிலோ கட்டியை கர்ப்பப்பையுடன் சேர்ந்து இருந்ததைமருத்துவர்கள் அகற்றி சாதனை :

திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் துறையில் முதல் முறையாக 4.5 கிலோ கட்டியை ஒருவருக்கு சினைப்பையில் இருந்தும், இன்னொரு நோயாளிக்கு 3.5 கிலோ கட்டியை கர்ப்பப்பையுடன் சேர்ந்து இருந்ததை அகற்றி இருக்கிறார்கள்.இந்த இரு நோயாளிகளும் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்கள் இதில் அபிதா என்னும் 55 வயது பெண் இறையூர் கிராமத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பொழுது அவருடைய சினைப்பையில் 9 மாத குழந்தை அளவுக்கு 4.5 கிலோ கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தாலுகாவை சேர்ந்த லட்சுமி என்ற 42 வயது பெண் வயிற்றில் கட்டியுடன் திருவள்ளூர் மருத்துவமனைக்கு வந்த பொழுது அவருடைய வயிற்றில் ஏழு மாத குழந்தை அளவிற்கு 3.5 கிலோ கிலோ கட்டி கர்ப்பப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இந்த இருவருக்கும் அந்தக் கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று ரத்த பரிசோதனை, சி.டி. ஸ்கேன் ,எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அது சாதாரண கட்டிதான் புற்றுநோய் கட்டி இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இருந்தாலும் பெரிய அளவு கட்டிகள் அனைத்தும் சென்னைக்கு சென்று அங்கிருக்கும் பெரிய மருத்துவமனையில் தான் அகற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறையின் தலைமை பேராசிரியர் மருத்துவர் ஆர். பாத்திமா ஹசன், மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ரேவதியின் ஊக்குவித்தலின் பேரில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் சுரேஷ் பாபு உதவியுடன், மயக்கவியல் துறையின் தலைமை மருத்துவர் சரவணகுமார் தலைமையில் மயக்கவியல் மருத்துவர்கள் செல்வம் , சுபாஷ், சரவணன் மற்றும் சிறுநீரக மருத்துவர் ஆனந்த் ஆகியோர் மகப்பேறு துறை தலைமை பேராசிரியர் டாக்டர் பாத்திமா ஹசன் தலைமையில் இணை பேராசிரியர் பத்மலதா மருத்துவர்கள் கீர்த்தனா, பிரவலிக்கா, ரிஸ்வானா மற்றும் செவிலியர்கள் ஜெயபாரதி, ஈஸ்வரி, மஞ்சு அவர்களும் இரு நோயாளிகளுக்கும் நாலரை கிலோ மற்றும் மூன்றரை கிலோ கட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

இதனால் நோயாளிகள் இருவரும் மிகவும் நலமாக வீட்டிற்கு செல்லும் இவர்கள் இருவரும் மகப்பேறு தலைமை மருத்துவர் மற்றும் டீன் அவர்களுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்கள்.இது சார்பாக தலைமை பேராசிரியர் மகப்பேறு துறை டாக்டர் பாத்திமா ஹசன் கூறுகையில், சென்னையில் கிடைக்கும் அனைத்து கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் உபகரணங்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறது. புற்றுநோய் அல்லாது சாதாரண கட்டிகள் பெரிய அளவில் இருந்தாலும் இங்கேயே அறுவை சிகிச்சை மூலம் எடுக்க எல்லா வசதிகளும் உள்ளது என்று தெரிவித்தார்கள்.

மேலும் இதற்கு முன்பு கர்ப்பப்பை அகற்ற வயிற்றில் பெரிய அளவுக்கு திறந்து தான் அகற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்பொழுது லேப்ரோஸ்கோபி மூலமாக, கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பை, சினைப்பையில் உள்ள நீர் கட்டிகள், சினைப்பையில் சிறிய அளவிலான மற்ற கட்டிகள் ஆகியவை சிறிய ஓட்டைகளை வயிற்றில் போட்டு அதன் மூலம் லேப் ரோஸ்கொபி கருவிகளை வைத்து ஆபரேஷன் செய்து முழுமையாக கர்ப்பப்பையை அல்லது கட்டியை வயிற்றை திறக்காமலேயே எடுத்து விட முடியும்.

முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக செய்து இருப்பதாகவும், தையல் கூட உள் தையல் மட்டும் போடப்பட்டது என்றும், இந்த அதி நவீன சிகிச்சையை டி .எல். எச். எனப்படும் டோட்டல் லேப் ரோஸ்கோபிக் ஹிஸ்டரக்டேமி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறையில் இப்பொழுது முதல் முதலாக இரண்டு நோயாளிகளுக்கு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.மேலும் அவர்களுக்கு துளை போட்டு ஆபரேஷன் செய்ததால் நான்கைந்து நாட்களிலேயே அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் கூறினார்கள்.

கற்றி அகற்றப்பட்ட இரண்டு பெண்களும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதிக்கும், மகளிர் நோயியல் துறையின் தலைமை பேராசிரியர் மருத்துவர் ஆர். பாத்திமா ஹசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.