பதிவு:2024-07-16 11:07:10
மாணவர்கள் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் : இந்திரா மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சதீஷ் பேச்சு:
திருவள்ளூர் ஜூலை 15 : மாணவர்கள் ஒவ்வொருவரும் விளையாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தீய பழக்கத்திலிருந்து எளிதில் விடுபடலாம் என பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நடிகர் சதீஷ் கூறினார்.திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல் லூரியின் ஆண்டு விழாவை முன்னிட்டு வெவ்வேறு போட்டிகள் நடைபெற்றன.
விழாவுக்கு இந்திரா கல்விக்குழுமத்தின் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் இந்திரா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சதீஷ், நடிகை ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், நடிகர் சதீஷ் பேசும் போது, வாழ்வில் சிறப்பிடம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு மாணவ, மாணவிகள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் விளையாட்டு, நடனம் உள் ளிட்ட பல்வேறு வகைகளில் தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தீய பழக்கத்திலிருந்து எளிதில் விடுபடலாம் என்றார்.
தொடர்ந்து, ஆண்டு விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவக் கல்வி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.