திருமுல்லைவாயில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் : மாநிலத் தலைவர் பங்கேற்று ஆலோசனை :

பதிவு:2024-07-19 12:22:49



திருமுல்லைவாயில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் : மாநிலத் தலைவர் பங்கேற்று ஆலோசனை :

திருமுல்லைவாயில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் : மாநிலத் தலைவர் பங்கேற்று ஆலோசனை :

திருவள்ளூர் ஜூலை 18 : ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கு. செல்வப் பெருந்தகை தலைமை தாங்கினார் . திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், மாவட்ட தலைவர்கள் ரவி சந்திரசேகர், ஆர்.எம்.தாஸ், இ.யுவராஜ், விக்டரி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ் ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், பூவை ஜேம்ஸ், ஏ.ஜி. சிதம்பரம், திருவேற்காடு லயன் ரமேஷ், இமாலயா அருண் பிரசாத், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர் சிசிக்குமார், தமிழ் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆ.திவாகர், காங்கை குமார், விக்டரி ஜெயக்குமார், ஒய். அஸ்வின் குமார், புழல் குபேந்திரன் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி. மோகன் தாஸ், மாவட்ட முதன்மை துணைத் தலைவர்கள் சதா பாஸ்கரன் வேப்பம்பட்டு கே.ஆர். அன்பழகன், மாவட்ட பொருளாளர் கிளாம்பாக்கம் ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், டாக்டர் வெங்கடேசன், கே.கே. சாந்தாராம், சி.எல்.சதா சிவலிங்கம், கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, , பேரம்பாக்கம் திவாகர் சுயம் பிரகாஷ், ஆர். டில்லி சுரேஷ், ஜோஷி பிரேம் ஆனந்த், வி.ஜே.தேவேந்திரன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பி எஸ் பி மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு,சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு, சிபிஐ விசாரணைக்கு தற்போது அவசியம் இல்லை. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான போலீஸ். இதனால் புலன் விசாரணை நடக்கட்டும். புலன் விசாரணையில் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு நாம் அதில் கருத்தை சொல்லலாம். எந்த உண்மையும் தெரியாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. காவல்துறையின் புலன் விசாரணையில் உடன்பாடு இல்லை என்றால் பின்பு எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறோம்.

கூலிப்படையினரின் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கத்தி எடுக்க கூடாது. துப்பாக்கி எடுக்க கூடாது என்ற செய்தியை சொல்ல வேண்டும்.வன்னியர் வாக்குகளையும், யாதவர் வாக்குகளையும் உடையார் வாக்குகளையும் முக்குலத்தோர் வாக்குகளையும் பெற்றுக் கொண்டு அண்ணாமலை என்னுடைய வாக்குகள் என்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை 130 ஆண்டு கட்சி அவர் சொல்வது போல் இல்லை. காங்கிரஸ் கட்சி தான் பெண்கள் ஒதுக்கீட்டில் முன்னணியில் உள்ள இயக்கம் .

காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை அதிகப்படுத்தி தற்பொழுது கேட்டு பெற்ற சீட்டுகளை காட்டிலும் அதிக சீட்டுகளை கேட்டு பெறுவோம்.குண்டாஸ், ரவுடி என அண்ணாமலை என்னை குறிப்பிட்டதை பெருமையாக பார்க்கிறேன். இதுபோல அவர் நிறைய பேச வேண்டும் நிறைய சொல்லணும், இன்னும் வலிமையாக சொல்லட்டும்.மறைந்த ஜெயலலிதா, எம்ஜிஆர், கலைஞர் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் இன்னும் நல்லா பேசணும் சட்டம் ஒழுங்கை நிலநாட்டுவதை தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.