திருமழிசை, வீச்சூர் தொழிற்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆய்வு :

பதிவு:2024-07-19 12:28:48



திருமழிசை, வீச்சூர் தொழிற்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆய்வு :

திருமழிசை, வீச்சூர் தொழிற்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆய்வு :

திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழிற்பேட்டையில் வெள்ள காலங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருமழிசை, வீச்சூர் தொழில் பேட்டையில் தொழிற்சாலைகள் வைத்துள்ள தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள் ,நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில் சங்கங்களுடன் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் சென்னை மாநகராட்சி (வடக்கு) வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் கூட்டாய்வு மேற்கொண்டார்.

இந்த தொழில்பேட்டையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை தடுப்பதற்கு குறுகிய காலத்திட்டங்கள் மற்றும் நீண்ட கால திட்டங்கள் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட முடிவுகளை விரைவில் அமல்படுத்த போகிறோம்.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழையில் பெய்தாலும் அந்த தாக்கத்தை தடுப்பதற்கான ஆலோசனை செய்துள்ளோம். இந்த ஆண்டு தொழில்பேட்டையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த முறை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட தொழிற்சாலைகளுக்கு அவர்களின் காப்பீட்டு திட்ட நிதிகளை பொறுத்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,தொழில் முனைவோர்களுக்கு எளிமையான முறையில் அரசின் குறைந்த வட்டியில் தொழில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொருள் சேதங்கள் குறைப்பதற்கும், உயிர் சேதம் முற்றிலும் ஏற்படாத வண்ணமும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. திருமழிசை தொழில் பேட்டை செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. 3.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஏரி இந்த தொழில் பேட்டை செம்பரம்பாக்கம் ஏரியை விட 5 மீட்டர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது.

அதன் காரணமாக நீர் வரத்து நீர்மட்டம் உயரும் போது தாமாகவே நிலத்தடி நீர் இயற்கையிலே அதிகமாகவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் எங்கெல்லாம் நடைபெற்று இருக்கிறதோ அது உடனடியாக சீர் செய்யப்படும் தேவையான இடங்களில் மழை நீரை வெளியேற்றுவதற்காக கால்வாய்களும் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து வீச்சூர் தொழிற்ப்பேட்டைக்கு செல்லும் வடிகால் பார்வையிட்டு உடனே கால்வாயினை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா,திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், உதவி இயக்குநர் (பேருராட்சிகள்) ஜெயகுமார், வட்டாட்சியர்கள் கோவிந்தராஜ் (பூவிருந்தவல்லி) மதிவானன் (பொன்னேரி) திருமழிசை பேருராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.