திருவள்ளூர் மாவட்டத்தில் டாக்டர்.கலைஞரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-05-23 11:36:08

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுச்போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2022-23 ஆம் ஆண்டுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி 03.06.2022 அன்று அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பெறும்.திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி 03.06.2022 அன்று கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி முற்பகல் 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கு II ல் நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000,மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பெறும்.பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவியர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.