பதிவு:2024-07-19 12:35:34
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆதிந), வடகரையில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆதிந), சென்னை-52. தொழிற்கல்வி பெறுவதற்காக 16.07.2024 முதல் 31.07.2024 வரை நேரடி சேர்க்கைக்காக வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆதிந) முதல்வரை நேரில் தொடர்பு கொள்ளலாம். நேரடி சேர்க்கைக்கு கடைசி தேதி : 31.07.2024 ஆகும்.
அதன்படி பொருத்துநர்,மின்சாரப்பணியாளர்,கம்மியர் மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பற்றவைப்பவர்,கம்பியாள் ஆகிய பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். பயிற்சிக்கட்டணம் இல்லை. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750 வீதம் வழங்கப்படும். மேலும், உணவுடன்கூடிய தங்கும் விடுதி, புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயணஅட்டையும், மற்றும் அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
நேரடி சேர்க்கைக்கு, வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆதிந) முதல்வர், செங்குன்றம், சென்னை-52, தொலைபேசி எண்.044-29555659, Mail:govtadwiti@gmail.com என்ற முகவரியில் நேரில் உரிய அசல் சான்றுகளுடன் அனுகலாம். மேலும் 044-29896032 மற்றும் 9444009046, 9499055670, 8883060606 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.