பதிவு:2024-07-22 11:12:20
திருவள்ளூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வழங்கி கௌரவித்தார் :
திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலை பண்பாட்டுதுறை சார்பில் 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை , கருவியிசை, பரதநாட்டியம் கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய ஐந்து கலைப் பிரிவுகளில் 10.03.2024 அன்று ஆவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
குரலிசை பிரிவில் முதல் பரிசு ஆர். கௌதம் இரண்டாம் பரிசு தி சாருகாசி, மூன்றாம் பரிசு த. தவசீலி, கருவியிசை பிரிவில் முதல் பரிசு எம். வெங்கடேஸ்வரன் (நாதஸ்வரன்), இரண்டாம் பரிசு வி. தினேஷ் ( தவில்), மூன்றாம் பரிசு டி குகன் (நாதஸ்வரம்), பரதநாட்டியம் பிரிவில், முதல் பரிசு ம. சுகி பிரார்த்தனா இரண்டாம் பரிசு ரா.வனமாலிகா, மூன்றாம் பரிசு டி.கே.கிரிதர்ஷினி, கிராமிய நடன பிரிவில் முதல் பரிசு பி. பிரசன்னா, இரண்டாம் பரிசு உ.அ. ஷியாம் கிஷோர். மூன்றாம் பரிசு நா. கௌதமி ஓவியன் பிரிவில் முதல் பரிசு மு. மணிகண்டன். இரண்டாம் பரிசு ஆர். அபிராமி, மூன்றாம் பரிசு ரா. லிவ்யஸ்ரீ ஆகியோருக்கு முதல் பரிசு ரூ.6,000 ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.4,500 ம் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.3,500 வீதம் 5 கலைப் பிரிவுகளில் மொத்தம் 15 வெற்றியாளர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் வழங்கினார்.இதில் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு துறை நீலமேகம், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.