திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கருவூல ஆணையரகம், தமிழ் நாடு அரசாங்கம், சென்னை இணைந்து வருமானவரி பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம் :

பதிவு:2024-07-22 11:15:46



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கருவூல ஆணையரகம், தமிழ் நாடு அரசாங்கம், சென்னை இணைந்து வருமானவரி பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கருவூல ஆணையரகம், தமிழ் நாடு அரசாங்கம், சென்னை இணைந்து வருமானவரி பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம் :

திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கருவூல ஆணையரகம், தமிழ் நாடு அரசாங்கம், சென்னை இணைந்து வருமானவரி பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.மாவட்ட கருவூல அலுவலர் சண்முகானந்தம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வருமானவரித்துறை தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம்), சென்னை எல்.ராஜசேகர ரெட்டி,எம்.முரளி, ஐ.ஆர்.எஸ் ஆணையர் (வரிப்பிடித்தம் ), சென்னை மற்றும் எம்.அர்ஜுன் மாணிக், கூடுதல் ஆணையர் வருமானவரி சரகம் -3, சென்னை இவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கருவூல ஆணையரகம், தமிழ் நாடு அரசாங்கம், சென்னை இணைந்து தமிழ் நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி, தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வருகின்ற அனைவருக்கும் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது

இந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் வருகின்ற தமிழ் நாடு அரசு வரிப் பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வருமானவரி அலுவலர்கள் தீபன் குமார், செந்தில் குமார் மற்றும் ராஜாராமன் ஆகியோர், வருமானவரிப் பிடித்தம் குறித்த பல்வேறு விதிகளின் அடிப்படையில் முறையாக வரிப் பிடித்தம் செய்வது எப்படி, வரிப் பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள், மேலும், வரி பிடித்த விதிகளை முறையாக பின்பற்ற வில்லை என்றால் எழும் சிக்கல்கள் குறித்து விளக்கினார் ஜானகி TRACES தளம் குறித்து விளக்கினார்

வரிப் பிடித்தம் குறித்த துண்டு பிரசுரம் மற்றும் கையேடு (கணினி வழி பிரதி) அனைவருக்கும் பகிரப்பட்டது. மேலும், INCOMETAX TRACES தளம் குறித்து தமிழ் மொழியில் 16 தலைப்புகளில் காணொலிகள் வருமானவரித் துறையின் கீழ் அதிகாரபூர்வ YOUTUBE தளத்தில் வரிப் பிடித்தம் செய்பவர்களின் பயன்பாட்டுக்கு உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட TDS -நண்பன் என்ற CHATBOT.PLAYSTORE மூலமாக பயன்பாட்டில் உள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த கருத்தரங்கத்தில் 300 க்கும் மேலானவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சித்ரா, மேற்பார்வையாளர் யசோதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.