பதிவு:2024-07-22 11:18:50
திருவள்ளூர் மாவட்டத்தில் 249 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பல் மருத்துவ பரிசோதனை முகாம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார சார்பில் 249 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பல் மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்து பார்வையிட்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 249 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பல் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது.இந்த பல் பரிசோதனை மாணவ மாணவிகளுக்கு பல் ஆரோக்கியம் மற்றும் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பல் சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளது என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.
இதில் உதவி திட்ட மேலாளர் ராஜேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ்சந்திரபோஸ்,திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, நலக் கல்வியாளர் கணேசன், பல் மருத்துவர் சந்துரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், கோவிந்தராஜிலு, பள்ளி தலைமை ஆசிரியர் ராம்மோகன், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.