திருகண்டலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதியில் முகாம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

பதிவு:2024-07-22 11:21:40



திருகண்டலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதியில் முகாம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

திருகண்டலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதியில் முகாம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

திருவள்ளூர் ஜூலை 20 : தமிழ்நாடு முதலமைச்சர் தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மஹாலில் 2-ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தொடங்கி வைப்பதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் உள்ள ஞானஜோதி மஹாலில் 2-ம் கட்டமாக நடைபெற்ற ‘’மக்களுடன் முதல்வர்” திட்டம் முகாமில் கைத்தறி மற்றும் தூணிநூல்த் துறை அமைச்சர் ஆர்,காந்தி கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ‘’மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் 2 -ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 15.07.2024 முதல் 13.08.2024 வரை 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன் அடிப்படையில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருகண்டலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமில் திருக்கண்டலம், அத்திங்காவனூர், கிளாம்பாக்கம், மாம்பள்ளம், அழிஞ்சிவாக்கம், குருவாயல், பெருமுடிவாக்கம், பூரிவாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மக்களுடன் முதல்வர் முகாமில் வழங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.பின்னர் 2 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளான வெள்ளியூர் ஊராட்சி பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார அலகு கட்டட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அதே ஊராட்சியில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகள் இழந்தவர்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டுமனை பார்வையிட்டு மழைக்காலங்கள் வரும்முன் கட்டிடப் பணிகளை முடித்திட வேண்டும். பயனாளிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் புன்னம்சத்திரம், சமத்துவ மேட்டு காலனி பகுதிகளில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.5.09 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு வீடு கட்டுவதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் நல்ல தரமாக இருப்பதை ஆய்வு செய்து வீடு கட்ட வேண்டும். மேலும் அதே பகுதியில் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை எந்தத் திட்டத்தில் கட்டப்பட்டது என்பதை ஒரு குழுவாக அமைத்து வீடு வீடாக சென்று கணக்கீட்டு ஒரு மாதத்திற்குள் பணிகளை முடித்து மக்கள் வசிப்பதற்கான ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும், மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குடிநீர் சாலை போன்ற பணிகளையும் முடித்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஓ.என்.சுகபுத்ரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அற்புதராஜ் ராமகிருஷ்ணன் (எல்லாபுரம்) , புன்னம்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.