திருவள்ளூரில் அத்தியாவசியப் பண்டங்கள் கடத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அண்டை மாநில அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் :

பதிவு:2024-07-22 11:24:36

திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்டம், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்கள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில்;, ஆந்திர மாநிலத்தின் திருப்பதி, சித்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த உணவுப்பொருள் வழங்கல், காவல் துறை அலுவலர்கள், ரயில்வே துறை காவலர்கள், மண்டல கண்காணிப்புத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார்,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கண்ணன், குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.