மணவாளநகரில் உள்ள அரசு உதவி பெறும் பணியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு : உள்ளாட்சி பிரதிநிதிகள் திறந்து வைத்தனர் :

பதிவு:2024-07-22 11:30:52

திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகரில் உள்ள கே.இ. நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ 1. 27 கோடி மதிப்பில் இரண்டு அடுக்குகள் கொண்ட ஆறு வகுப்பறைகளை கொண்ட கட்டிடத்தை நபார்டு திட்டத்தின் கீழ் கட்டி அதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். ஞானசேகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வசந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் நா.வெங்கடேசன், யோகானந்தம், திமுக ஒன்றிய செயலாளர் கே.ஹரி கிருஷ்ணன், வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். மோகன சுந்தரம், துணைத் தலைவர் ஆர். டில்லி, வழக்கறிஞர் பி.கே. நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவரும் கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலருமான கே. திராவிடபக்தன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார்.

இதில் வெங்கத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரன், நந்தகோபால் மற்றும் திமுக நிர்வாகிகள் இ.சீனிவாசன், அண்ணாமலை, மதியழகன், ராயப்பா மற்றும் ஆசிரியர்கள் வெங்கடேசன், ஆனந்தன், ஹரிபாபு, டென்னிசன், உமாசங்கரி, மாலதி, ரேவதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சே.பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.