திருவள்ளூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்சா ஊராட்சி பணியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-07-22 11:32:55



திருவள்ளூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்சா ஊராட்சி பணியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்சா ஊராட்சி பணியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி சாலை முன்பு ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்சா ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யுவராணி தலைமை தாங்கினார்.மாநில ஒருங்கிணைப்பாளர் இந்திரா முன்னிலை வகித்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தனிதேவி, மாவட்ட பொருளாளர் அமுதா, மாவட்ட செயலாளர் ஷகிலா ஆகியோர் வரவேற்றனர். ஓட்சா கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.அமல்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பிரிவு மாநில தலைவர் கே.லட்சுமணன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் 536 சுகாதார ஊக்குநர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 5 மாதங்களாக மாத தொகுப்பூதியம் ரூ.2000 வழங்காத நிலையில் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். தாமதமாக ஊதியம் வழங்கும் ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இனிமேல் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் இடங்கள் காலியாக உள்ளதால் வேலைப்பளு அதிகமாக உள்ளதை குறைக்க காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

2000 த்துக்கு பின் பணி நியமனம் செய்த குடிநீர் மோட்டார் ஆபரேட்டர்கள் சில ஒன்றியங்கள் மாதம் ரூ.250 பெற்று வரும், இனிமேல் மாதம் ரூ.2000 ஊதியம் வழங்கி பணிபதிவேடு தொடங்கவும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த சங்கங்களைச் சேர்ந்த குடிநீர் மோட்டார் ஆபரேட்டர்கள், சுகாதார ஊக்குநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.