திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ. 7,37 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-07-23 12:15:59



திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ. 7,37 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  26 பயனாளிகளுக்கு ரூ. 7,37 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட  ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் ஜூலை 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 417 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 70 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 67 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 46 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 105 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 129 மனுக்களும் என மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சார்பில் 2023 2024- ஆம் ஆண்டிற்க்கான பிறருடன் பேசித் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட புற உலக சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென் பொருளுடன் கூடிய உபகரணம் AAVAZ - ஐ 20 பயனாளிகளுக்கும் மற்றும் 6 நபர்களுக்கு மூடநீக்கு சாதனம் மொத்தம் ரூ. 736,700 மதிப்புள்ள பொருட்கள் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் தனி துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.