பதிவு:2024-07-23 12:21:00
திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமன உதவியாளராக தேர்வு செய்யப்பட்ட 28 நபர்களுக்கு பணி நியமன ஆணை : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வழங்கி அறிவுரை :
திருவள்ளூர் ஜூலை 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் CCSE-II (Group IIA SERVICES) மூலம் நேரடியாக நியமன உதவியாளராக இம்மாவட்ட வருவாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 28 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் பணி நியமன ஆணையினை வழங்கி அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் CCSE-II (Group IIA SERVICES) Non interview post 03/2022 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 28 நபர்கள் இம்மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 28 நபர்களுக்கு பணி நியமனம் செய்து அவர்களுக்கு வருவாய்த்துறைகளின் செயல்பாடுகளும் அதன் கடமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.