பதிவு:2024-07-27 11:42:51
நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தணி நகருக்கான புறவழிச் சாலையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தணி நகருக்கான புறவழிச்சாலையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் த பிரபு சங்கர் தலைமையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.
திருத்தணி புறவழிச்சாலை திட்டமானது திருத்தணி மக்களின் நீண்ட நாள் கனவாகும். அவர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி புறவழிச்சாலையினை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புறவழிச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பதி, சென்னை மற்றும் சித்தூர் செல்லும் பொது மக்கள் பள்ளி, கல்லூரி வாகனங்கள் புறவழிச் சாலை வாகனங்கள் பயனடைவார்கள்.
இந்த புறவழிச் சாலையை திறப்பது மூலம் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள் இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் காலதாமதம் ஏற்படாது இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.51.45 கோடியாகும் தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் உடனடியாக ஆராய்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ரகுராமன், திருத்தணி உதவி பொறியாளர் அருள் ராஜ், திருத்தணி நகராட்சி துணை தலைவர் சாமி ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.