பதிவு:2024-07-27 11:46:25
கீச்சலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 306 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் :
திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் கீச்சலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த பிரபு சங்கர் தலைமை தாங்கினார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன் முன்னிலை வகித்தார்.முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி 306 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
மக்கள் தொடர்பு முகாம்களை ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தாமல் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசு அலுவலர்கள் துறைவாரியாக நடவடிக்கை எடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் மக்கள் தொடர்பு முகாமில் 306 பயனளிகளுக்கு ரூ 1.34 கோடி மதிப்பீட்டில் பயனடைய உள்ளார்கள். மேலும் மக்களுடன் முதல்வர் முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் 74 இடங்களில் இன்றைய தினம் 4 இடங்களில் நடைபெற்று வருகின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் வயது 15 துறைகள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும் இத்திட்டத்தில் தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் 24 மணி நேரமும் மக்களுக்காகவே பணிபுரிந்து வருகிறார்கள் மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். பள்ளிகளில் இடைநீற்றலை குறைக்கும் வகையில் காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம், உயர் கல்வி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை கல்விக்கு செயல் படுத்தி வருகிறார்.
டாக்டர் கலைஞர் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் எட்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்து ஏழைப் பெண்களின் கல்வியே ஊக்குவித்தவர் அந்த அளவுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் கலைஞர் அவர்கள் தான் மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது மக்களே தேடி செல்லும் அரசு மக்கள் நலனை காக்கும் அரசு என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.3,55,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், 12 பயனாளிகளுக்கு ரூ.11,50,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஒரு பயனளிக்கு ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகையும், 23 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4,60,000 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், மேலும் 4 பயனாளிகளுக்கு ரூ.34,000 மதிப்பீட்டில் கல்வி மற்றும் திருமண உதவித் தொகையும், 51 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் உட்பிரிவுக்காண ஆணையும், 38 பயனளிகளுக்கு பட்டா மாற்றம் முழு புலத்திற்கான ஆணைகளையும், 105 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும்.
கலைஞரின் கனவு இல்ல திட்டமும் 16 பயனாளிகளுக்கு ரூ.56,00,000 மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், தோட்டக்கலை துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ.44,000 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்களும், வேளாண்மை துறை சார்பில் 4 பயனாளிக்கு ரூ.12940 மதிப்பீட்டில் வேளாண் இடுப் பொருட்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.60,210 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.55,42,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும் ஆக மொத்தம் பல்வேறு துறை சார்பில் 306 பயனாளிகளுக்கு ரூ.13391600 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. தீபா , தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், பள்ளிப்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜான்சி ராணி, கீச்சலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜான் சூசைநாதன், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.