பதிவு:2024-07-27 11:51:07
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் இராமதாசின் 86 பிறந்தநாளை முன்னிட்டு வெங்கத்தூர் கண்டிகையில் கல்வெட்டை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் :
திருவள்ளூர் ஜூலை 26 : தமிழக போராளி மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்த நாளை ஆண்டுதோறும் பசுமை தாயகம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு தமிழக போராளி மருத்துவர் இராமதாசின் அவர்களின் 86 பிறந்தநாளை பாட்டாளி மக்கள் கட்சி , வன்னியர் சங்கம்,பசுமை தாயகம் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக போராளி மருத்துவர் இராமதாசின் அவர்களின் 86 பிறந்தநாளை முன்னிட்டு வெங்கத்தூர் கண்டிகை கிளையில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கல்வெட்டை திறந்து வைத்து, பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி, மருத்துவர் அய்யா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை போற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் பென்சில்,பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளியில் மாணவ மாணவிகளை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர் விஜயராகவன்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கண்ணன்,சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.