மணவாளநகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள பெட்டிக்கடைகள், பேனர்கள் அகற்றம் :

பதிவு:2024-07-27 11:53:16



மணவாளநகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள பெட்டிக்கடைகள், பேனர்கள் அகற்றம் :

மணவாளநகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள பெட்டிக்கடைகள், பேனர்கள் அகற்றம் :

திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை பேருந்துகள், பள்ளி, கல்லூரி செல்லும் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் கார் வேன் லாரி போன்ற வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இதனால் காலை மாலை வேலைகளில் அதிகளவு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய சூழ்நிலையில் மணவாள நகர் பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த இரும்புகளால் ஆன பேனர்கள், பல்வேறு கடைகளில் வைத்திருந்த விளம்பர பலகைகள், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், தனியார் இருசக்கர வாகன ஷோரூம்களின் டெமோ ஸ்டால்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருந்ததால் பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலை துறைக்கும் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து மணவாளநகர் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலைகளின் இரு பக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு ஜேசிபி எந்திரங்களுடன் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உதவியோடு நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். சாலை ஓரங்களில் உள்ள இரும்பு பதாகைகள், கடை விளம்பர பேனர்கள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.