பதிவு:2024-07-27 11:55:21
சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு ஒரு நாள் , 2 நாள் சுற்றுலா : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை :
திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வருவதற்கு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட கடிதத்தை ஏற்று ஒரு நாள் கோவில் சுற்றுலா மற்றும் இரண்டு நாட்கள் கோவில் சுற்றுலா சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பேருந்தின் மூலம் அழைத்து சென்று வருவதற்கான சுற்றுலா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருநாள் கோவில் சுற்றுலாவிற்கு காலை 6 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வளாகம், வாலாஜா சாலையிலிருந்து புறப்பட்டு திருமழிசை அருள்மிகு ஜெகநாதப்பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில்,
காலை 8 மணிக்கு திருநின்றவூர் அருள்மிகு பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், காலை உணவு இடைவேளை - காலை 11 மணி திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோயில், மதிய உணவு இடைவேளை - பிற்பகல் 3 மணி திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மாலை 5 மணிக்கு திருத்தணியிலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்திற்கு வந்தடைதல் ஒருநாள் கோவில் சுற்றுலாவிற்கு கட்டணம் ஒரு நபருக்கு 18 இருக்கை குளிர்சாதன வசதியுடன் 18 இருக்கை குளிர்சாதன வசதி இல்லாமல் ரூ.1400, ரூ.1300 ஆகும்.
இரண்டு நாட்கள் கோவில் சுற்றுலாவிற்கு முதல் நாள் காலை 5 மணி சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வளாகம், வாலாஜா சாலையிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு கோவிலுக்கு செல்லுதல்,இரவு திருத்தணியில் தங்குதல்.
இரண்டாம் நாள் காலை 7 மணிக்கு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காலை உணவு இடைவேளை - காலை 11 மணிக்கு திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோயில், மதிய உணவு இடைவேளை - மாலை 4 மணிக்கு திருநின்றவூர் அருள்மிகு பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், மாலை 5.30 மணிக்கு திருநின்றவூர் அருள்மிகு ஜெகநாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், மாலை 6.30 மணி திருநின்றவூரிலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்திற்கு வந்தடைதல்
கட்டணம் இரண்டு நாட்கள் கோவில் சுற்றுலா ஒரு நபருக்கு 18 இருக்கை குளிர்சாதன வசதியுடன் ஒற்றை ரூ.7500, பகிர்வு ரூ.5400, குழந்தை ரூ.4700 ஆகும்.18 இருக்கை குளிர்சாதன வசதி இல்லாமல் ஒற்றை ரூ.6600, பகிர்வு ரூ.4900, குழந்தை ரூ.4300 ஆகும்.
இந்த சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு 9176995870, 18004231111, 044-25333333,044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.