பதிவு:2024-07-27 12:10:08
காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை :
திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர், காக்களூர் பைபாஸ் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து சந்தன காப்பும், பஞ்ச பூஜை ஆராதனையும் திருவிளக்கு பூஜையும்,மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.இந்த திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சுரேஷ், தசரதன் நாயுடு, ஆர்யா சீனிவாசன், வெங்கடேசன், அருள், தர்மலிங்கம், ரகு, பாலசுப்பிரமணியம், புஜ்ஜிராஜ், ரகுபதி , முகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.