திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெ.என்.சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : நகராட்சி நிர்வாகம் அதிரடி :

பதிவு:2024-07-27 12:11:54



திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெ.என்.சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : நகராட்சி நிர்வாகம் அதிரடி :

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெ.என்.சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : நகராட்சி நிர்வாகம் அதிரடி :

திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் திருவள்ளூருக்கு வருகின்றது. அதேபோல் தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் பேருந்துகளும் என திருவள்ளூர் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன .

இந்த நிலையில் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க நகரின் முக்கிய சாலையான ஜெ.என். சாலையில் நடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நடைபாதையில் அதிக அளவில் பூக்கடைகள், செருப்பு கடைகள், ஆடைகள் விற்பனை என கடைகள் அமைத்து பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல முடியாதபடி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் நடை பாதையில் நடந்து செல்ல வேண்டிய பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் வரும் போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதுகுறித்த தொடர் புகார் காரணமாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு உத்தரவின் பெயரில் நகர அமைப்பு ஆய்வாளர் விஜயா மற்றும் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், மற்றும் துப்புரவு பணியாளர்கள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது எனவும் மீண்டும் புகார் வந்தால் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.