மண்ணையும் பொன் என விளம்பரம் செய்தால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற நிலையில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை அரசு பேருந்தில் ஒட்டப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி :

பதிவு:2024-07-27 12:14:36

திருவள்ளூர் ஜூலை 27 : கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறுத்திவிட்டது. அரசின் சாதனைகள் திட்டங்கள் ஏதேனும் இருந்தால் தானே அதனை விளம்பரப்படுத்துவதற்கு? என்று கேட்க தோன்றும் வகையில் திருவள்ளூரில் இயக்கப்படும் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் அரசின் திட்டங்கள், சலுகைகள், அறிவிப்புகளை வெளியிடாமல் தனியார் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் இது போன்ற விளம்பரங்கள் ஓட்டப்படுவதால் விளம்பரப்படுத்தும் பொருள் உடலுக்கு நல்லதா, தீங்கு விளைவிக்க கூடியதா, சூதாட்டம் போன்ற விளம்பரமா என தெரியாமல் பொதுமக்கள் அதிக அளவில் ஏமாறக்கூடிய சூழ்நிலை உள்ளது. மண்ணையும் பொன் என விளம்பரப்படுத்தினால் அதனை வாங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த திமுக அரசு பணத்தை வாங்கிக் கொண்டு பேருந்தில் விளம்பரத்தை ஒட்டி வருகிறது.

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தனியார் விளம்பரங்கள் ஒட்டப்படுவதால் சாலையில் வருவது அரசு பேருந்தா? அல்லது தனியார் பேருந்தா என மக்கள் மனதில் குழப்பமே மிஞ்சுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் திட்டங்கள் நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை விளம்பரப்படுத்தலாமே என கோரிக்கை விடுத்துள்ளனர்.