கருணாகரச்சேரி ஊராட்சியில் அமுதூர்மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே ரூ 5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

பதிவு:2022-05-23 12:02:34



கருணாகரச்சேரி ஊராட்சியில் அமுதூர்மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே ரூ 5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

கருணாகரச்சேரி ஊராட்சியில் அமுதூர்மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே ரூ 5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மே 23 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அமுதூர்மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே 7.5 மீட்டர் அகலமும், 83 மீ நீளத்திலும் ரூ 5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பணிகளை துவக்கி வைத்து, பார்வையிட்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அமுதூர் மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றில் மழை வெள்ளம் வரும்போது 6 கி.மீ. சுற்றிக் கொண்டு வரவேண்டிய இடர்பாடான சூழ்நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்படுகிறது என்ற கோரிக்கையை கடந்த கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தீர்கள்.

அக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அமுதூர் மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே 7.5 மீட்டர் அகலமும், 83 மீ நீளத்திலும் ரூ 5.71 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி உதவியுடன் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டி,பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் உபரி நீர் கால்வாயில் அதிகளவு நீர் வரத்தின் காரணமாக சித்துக்காடு, கருணாகரச்சேரி, இராஜங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3000 மக்கள் அன்றாட தேவைகளுக்காக பூவிருந்தவல்லி மற்றும் திருவள்ளூர் செல்வதற்கு சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதனை போக்கும் வகையில் இன்னும் சில மாதத்திற்குள் அதிகாரிகளின் பெருமுயற்சியால் மிக விரைவில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யப்படும். பிறகு அந்த உயர்மட்ட பாலத்தில் பொதுமக்கள் எளிதில் பயணிக்கலாம். மேலும், பொதுமக்கள் வைத்த கோரிககைகள் அனைத்தும் கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மேலும், இவ்வூராட்சிக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து, கிராம ஊராட்சி கட்டமைப்பை மேம்படுத்த தேவையான அனைத்து பணிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) சுதா, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பரமேஷ்வரி கந்தன், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.