மெய்யூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் : கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்பு :

பதிவு:2024-07-30 12:30:34



மெய்யூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் : கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்பு :

மெய்யூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் : கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ  டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்பு :

திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 18 துறைகளின் கீழ் பொது மக்களுக்குள்ள குறைகளை மனுவாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . அதன்படி திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் மெய்யூர், இராமதண்டலம், சித்தம்பாக்கம், எறையூர், மொன்னவேடு, தேவந்தவாக்கம், மாமண்டூர் ஆகிய ஏழு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களுடன் முகாமில் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஏழு ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வருகை தந்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, சான்றிதழ் வழங்கினார்.ஏற்கனவே வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்து வருகிறோம், ஜமாபந்தி போன்ற நிகழ்ச்சிகளில் கோரிக்கை மனுவை அளித்து வருகிறோம். தற்போது தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற திட்ட முகாமில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததால் அங்கும் பொதுமக்கள் மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்தின் மூலமாவது மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பது கோரிக்கையாக உள்ளது.