பெரியகுப்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் சார்பாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-07-30 12:32:34

திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் பெரியகுப்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் சார்பாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் ஜே .ஜோஷி பிரேம் ஆனந்த் வரவேற்றார்.

இதில் மாநில செயலாளர் ஒய்.அஸ்வின் குமார், மூத்த துணை தலைவர் தலைவர் தளபதி மூர்த்தி , சரஸ்வதி, ஏகாட்டூர் ஆனந்தன், மாயாண்டி, அசின் பாஷா, கே டி பிரகாஷ், ஆல்பர்ட் இன்பராஜ், தீபன் லாரன்ஸ் வட்டாரத் தலைவர்கள் எஸ்.எஸ். பாலாஜி புருஷோத்தமன், ராஜேஷ், மீஞ்சூர் ஜெயசீலன், வினோத்குமார், கருட அருள் செல்வகுமார், பார்த்தசாரதி, சபீர், டேவிட் பில்லா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்

இதில் வடக்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ பேசும்போது, ஒன்றிய பாஜக அரசு காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும், தமிழகத்திற்கும் நிதி ஒதுக்காமல் வஞ்சித்துள்ளது.கூட்டணியில் உள்ள ஒரு சில மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசு 10 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 10 முறை படையெடுத்தும் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியவில்லை.எனவே தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.