பதிவு:2024-07-30 12:36:45
திருத்தணியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார் :
திருவள்ளூர் ஜூலை 30 : திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியில் சண்முகர் திருமண மாளிகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இப்பல்துறை பணி விளக்க கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை, திருத்தணி நகராட்சி, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மகளிர் சுய உதவி குழு, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட 16 துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையிலான பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பல்துறை பணி விளக்க கண்காட்சியில் திருத்தணி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பசுந்தாள் இயற்கை உரம் விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. தீபா, இணை இயக்குநர் வேளாண்மை முருகன், நகராட்சி பொறியாளர் ராமராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபமேரி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் திருத்தணி கோட்டம் தாமோதரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.