திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் ஆடி கிருத்திகை தெப்பத்தேர் திருவிழா : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு :

பதிவு:2024-07-30 12:38:57



திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் ஆடி கிருத்திகை தெப்பத்தேர் திருவிழா : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு :

திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் ஆடி கிருத்திகை தெப்பத்தேர் திருவிழா : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு :

திருவள்ளூர் ஜூலை 30 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் ஆடி கிருத்திகை தெப்பத்தேர் திருவிழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டனர்.

முன்னதாக,அருள்மிகு சுப்ரமணிய சுவாமிதிருக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள சண்முகர் திருமண மாளிகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார். இப்பல்துறை பணி விளக்க கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை, திருத்தணி நகராட்சி, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மகளிர் சுய உதவி குழு, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட 16 துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையிலான பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்கள்,

மேலும் ஆடி கிருத்திகை திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பாக நடத்தப்பட்ட கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பார்வையிட்டார்,

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் நடைபெற்ற ஆடி கிருத்திகை தெப்பத்தேர் திருவிழாவில் ஆடி கிருத்திகை தெப்பத்திரு உலா காட்சியை அமைச்சர், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டனர்.

இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் த.விக்னேஷ், முன்னாள் திருத்தணி நகர் மன்ற உறுப்பினர் பூபதி, திருத்தணி நகர் மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.சா.கருப்பணராஜவேல், திருக்கோயில் அறங்காவலர்கள், கலைக் குழுவினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.