பதிவு:2024-07-31 12:53:06
திருவள்ளூரில் புகை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கருத்தரங்கு :
திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த பிரபு சங்கர் தலைமை தாங்கி இந்த பயிற்சி முகாமில் புகை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை தடுப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பயிற்சியில் மருத்துவர் சுரேந்திரன் வீரய்யா பேராசிரியர், புற்றுநோய் நிபுணர் சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனம் , மருத்துவர் விமல் ஜோஷி வீரப்பன் மனநல மருத்துவர் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மனநல மருத்துவர் சகுந்தலா தேவி அவர்கள் பயிற்சி முகாமில் கருத்துரை வழங்கினார்கள். முகாமில் மருத்துவர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.