தேவந்தவாக்கம் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக ஆறு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட ஜல்லிக்கற்களில் நடந்து செல்லவும், இரு சக்கர வாகனத்தில் செல்ல பொதுமக்கள் மாணவ மாணவிகள் முதியோர்கள் அவதி :

பதிவு:2024-07-31 12:57:41

திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் தேவந்தவக்கம் மயிலாப்பூர் மெய்யூர் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இத்நிலையில் தேவேந்தவாக்கம் முதல் மெய்யூர் வரை செல்லும் மூன்று கிலோமீட்டர் தூர சாலை சேதமடைந்ததால் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஜல்லிகற்கள் போடப்பட்ட நிலையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளாததால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்லும் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் ஜல்லிகற்கள் நிறைந்த சாலையில் செல்லும்போது தவறி விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

எனவே சாலையை விரைந்து முடிக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.