ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு பயிற்சி வகுப்பை முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-31 13:03:22

திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையில் அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஆண்டு தோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வரிவிப்பை நடைமுறை படுத்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர்-14 தேதி நடத்த படஉள்ள ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு பயிற்சி வகுப்பை முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதிவசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் சி.எஸ்.ஜ. காதுகேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் வரும் 01.08.2024 அன்று சி.எஸ்.ஜ. காதுகேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் சாலை மயிலாப்பூர் சென்னையில் காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ள சிறப்பு பயிற்சியில் நேரில் வந்து விண்ணப்பித்து கலந்து கொண்டு பயன் பெறலாம் என்பதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.