அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-31 13:05:08



அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 31 : அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தில், மாதந்தோறும் ரூ.1,000/- அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற்று வந்தநிலையில். தற்போது அரசாணை(நிலை) எண்:16, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்[சந3(1)]துறை, நாள்:11.03.2024-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்க இத்திட்டத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் கல்லூரிகளில் மேற்படிப்பில் சேரும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கணக்கு தொடங்கி, வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். மேலும் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்ட Noddle Officer மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.