பதிவு:2024-07-31 13:06:26
திருவள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மத்திய அரசு வழங்கும் சான்றிதழ்கள் பெற்று கொள்ளலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 31 : அம்பத்தூர், அரசினர் தொடர் அறிவுரை மையம் தற்போது திருவள்ளூர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் என்ற பெயரில் திருவள்ளூர், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலக கட்டிட முதல் தளத்தில் 01.10.2019 முதல் இயங்கி வருகிறது.
தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் (NAC) (தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்) 1971 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் உள்ளது. இவ்வலுவலகத்தின் வாயிலாக தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் உடன் உரிய ஆதாரங்களுடன் இவ்வலுவலகத்தினை அனுகி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.