ஆலப்பாக்கம் ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், படையல் திருவிழா மற்றும் விளக்கு பூஜை :

பதிவு:2024-07-31 13:09:02



ஆலப்பாக்கம் ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், படையல் திருவிழா மற்றும் விளக்கு பூஜை :

ஆலப்பாக்கம் ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், படையல் திருவிழா மற்றும் விளக்கு பூஜை :

திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, ஆலப்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த எல்லை தெய்வம் ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல்,படையல் திருவிழா மற்றும் விளக்கு பூஜை வெகு விமர்சையாக கடந்த 26 ம் தேதி ஸ்ரீ பொன்னியம்மன் பக்த ஜன சங்க நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து விழாவின் 2 ம் நாள் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் 3 ம் நாள் காலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை கும்ப படையல், சீர்வரிசை படையல் மற்றும் விளக்குபூஜை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இறுதியாக இரவு பக்தி பாடல் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவில் சங்க தலைவர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு,செயலாளர் ஆர்.ஜெயகுமார், பொருளாளர் ஜி.முனுசாமி,கௌரவ தலைவர் ஏஜி.கிருஷ்ணமூர்த்தி, எம்.ரவிகுமார்,துணை தலைவர்கள் குமரேசன்,முருகன்,சுகுமார்,துணை செயலாளர்கள் வேணு,ரவி,பாபு மேஸ்திரி,ஆலோசகர்கள் பாபு, ரகோத்தமன் ,கமலதாஸ்,சட்ட ஆலோசகர் ஆறுமுகம்,சரண்யா ராதாகிருஷ்ணன்,ஜெகன்,ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர்.