பதிவு:2024-08-01 12:18:28
திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு 17391 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8.38 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் : கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 127 பள்ளிகளில் பயிலும் 17391 மாணவ மாணவியர்களுக்கு ரூ.8,38,51,460 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மணவாளநகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் வி,ஜி, ராஜேந்திரன் ( திருவள்ளூர்), எஸ், சந்திரன் (திருத்தணி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் அதிக அளவில் நிதி ஒதுக்கிடு செய்து மாணவ, மாணவியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.தமிழ்நாடு அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களையும் மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். 6 ஆம் முதல் 12 ஆம் பகுப்புவரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர்களுக்கு தற்போது தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.
அதேபோல், மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தி தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் விரைவில் வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற கல்விக்காக இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் நம் மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
அந்த அளவிற்க்கு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் கல்வி பயிலாதற்கலுக்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தினை உருவாக்கி கல்வி அறிவை ஊக்கபடுத்தினார். மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் விதமாக மாதிரி பள்ளிகள் முலம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் பள்ளி படிப்பு படிக்கின்ற காலங்களிலேயே நம்பிக்கையுடன் பள்ளிப்படிப்பை முயன்று படித்தால் வெற்றி நிச்சயம் ஆகவே இதுபோன்ற திட்டங்களை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாண்புமிகு கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் வழங்கினார்.அந்த வகையில் மணவாளநகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 அம் வகுப்பு பயிலும் 308 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளுர் மாவட்டத்தை பொருத்தவரை 127 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்7645 மாணவர்களுக்கும் 9746 மாணவிகளுக்கு ஆக மொத்தம் 17391 மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு ரூ.4900 மதிப்பிலும், ஒரு மாணவியர்க்கு ரூ.4760 மதிப்பிலும் என மொத்தம் ரூ. 8,38,51460 மதிப்பில் வழங்கப்படுகிறது என கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவி சந்திரன் தலைமையசிரியர் ஞானசேகரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் சுகானந்தம் (திருவள்ளூர்) புண்ணியகோடி (பொன்னேரி) மற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.